Sunday, November 2, 2008

மணிவிழா

நூல் அறிமுகம்

பேராசிரியர் சி. மெ�னகுரு மணிவிழா

தொகுப்பு: பாலசுகுமார்

பேராசிரியர் சி. மெ�னகுருவின் மணிவிழாவிற்காக அவரது மாணவர் பாலசுகுமார் தொகுத்துள்ள நூல் இது. பொதுவாக மணிவிழா மலர் என்றால் விளம்பரங்களின் குவியலாக இருக்கும். இந்த மலரில் அப்படி ஏதும் இல்லாமல் மெ�னகுருவைப் பெருமைப்படுத்தும் வகையில் உள்ளது. தமிழகத்திலும் இலங்கையிலும் வாழும் நாடகத்துறை சார்ந்த அறிஞர்கள் எழுதியுள்ள கட்டுரைகளும் 1997இல் கணியன் இணைய இதழில் வெளிவந்த மெ�னகுருவின் நேர்காணலும் மெ�னகுருவின் ஆளுமையின் பல்வேறு பரிமாணங்களை எடுத்துக்காட்டும் விதமாக உள்ளன. மெ�னகுருவின் மாணவி சுகுமார் அனாமிகா ஒன்றரைப் பக்கத்தில் தனது அன்பையும் பாசத்தையும் கொட்டிவிடுகிறார்.

மெ�னகுரு மட்டக்களப்புக் கூத்தை நவீன நாடக அரங்கிற்குள் கொண்டு வந்து தன்னை ஒரு நடிகராக, இயக்குனராக, இலக்கியவாதியாக, நாடகம் எழுதுபவராக, பல்கலைகழகக் கலைப் பீடாதிபதியாக நிலைப்படுத்திக்கொண்டவர். தமிழக, இலங்கை நாடகக்காரர்களை ஒன்றிணைக்கும்விதமாக "உலக நாடக விழா" ஒவ்வொரு ஆண்டும் இலங்கையில் நடத்தப்படுவதற்கு முக்கியக் காரணமாக விளங்கியவர். பேராசிரியர்கள் சிவத்தம்பி, கைலாசபதி, வித்தியானந்தன் போன்றவர்களை மறக்காது இன்றுவரை நினைவுகூறும் பண்பாளர்.

கே. ஏ. குணசேகரன், வெளி. ரெங்கராஜன், ந. இரவீந்திரன், இரா. இராஜ�, வ. ஆறுமுகம் ஆகியோர் மெ�னகுருவின் முக்கியத்துவம் நன்கு விளங்க எழுதியுள்ளார்கள். அதேபோல் இலங்கையின் கா. சிவத்தம்பி, சு. வித்தியானந்தன், எஸ். சண்முகதாசன், கைலாசபதி, அ. சண்முகதாஸ், பால சுகுமார், அருட்சகோதரி ஸ்ரனிஸ்லஸ் மேரி, ஏ. ரி. பொன்னுத்துரை ஆகியோர் மெ�னகுருவைப் பற்றி மட்டுமல்லாது அவரது நாடகங்கள் குறித்தும் ஆய்வு நோக்கோடு எழுதியுள்ளார்கள்.

நாற்பது ஆண்டுகளாகத் தீவிரமாகச் செயல்பட்டுவரும் ஓர் ஆளுமையைச் சிறந்த முறையில் கெ�ரவிக்கும் தொகுப்பு இது.

வெளியீடு: அனாமிகா, இல 48 பெய்லி முதலாம் குறுக்குத்தெரு, மட்டக்களப்பு, இலங்கை. பக். 96, விலை: குறிப்பிடவில்லை.