Sunday, November 2, 2008

மணிவிழா

நூல் அறிமுகம்

பேராசிரியர் சி. மெ�னகுரு மணிவிழா

தொகுப்பு: பாலசுகுமார்

பேராசிரியர் சி. மெ�னகுருவின் மணிவிழாவிற்காக அவரது மாணவர் பாலசுகுமார் தொகுத்துள்ள நூல் இது. பொதுவாக மணிவிழா மலர் என்றால் விளம்பரங்களின் குவியலாக இருக்கும். இந்த மலரில் அப்படி ஏதும் இல்லாமல் மெ�னகுருவைப் பெருமைப்படுத்தும் வகையில் உள்ளது. தமிழகத்திலும் இலங்கையிலும் வாழும் நாடகத்துறை சார்ந்த அறிஞர்கள் எழுதியுள்ள கட்டுரைகளும் 1997இல் கணியன் இணைய இதழில் வெளிவந்த மெ�னகுருவின் நேர்காணலும் மெ�னகுருவின் ஆளுமையின் பல்வேறு பரிமாணங்களை எடுத்துக்காட்டும் விதமாக உள்ளன. மெ�னகுருவின் மாணவி சுகுமார் அனாமிகா ஒன்றரைப் பக்கத்தில் தனது அன்பையும் பாசத்தையும் கொட்டிவிடுகிறார்.

மெ�னகுரு மட்டக்களப்புக் கூத்தை நவீன நாடக அரங்கிற்குள் கொண்டு வந்து தன்னை ஒரு நடிகராக, இயக்குனராக, இலக்கியவாதியாக, நாடகம் எழுதுபவராக, பல்கலைகழகக் கலைப் பீடாதிபதியாக நிலைப்படுத்திக்கொண்டவர். தமிழக, இலங்கை நாடகக்காரர்களை ஒன்றிணைக்கும்விதமாக "உலக நாடக விழா" ஒவ்வொரு ஆண்டும் இலங்கையில் நடத்தப்படுவதற்கு முக்கியக் காரணமாக விளங்கியவர். பேராசிரியர்கள் சிவத்தம்பி, கைலாசபதி, வித்தியானந்தன் போன்றவர்களை மறக்காது இன்றுவரை நினைவுகூறும் பண்பாளர்.

கே. ஏ. குணசேகரன், வெளி. ரெங்கராஜன், ந. இரவீந்திரன், இரா. இராஜ�, வ. ஆறுமுகம் ஆகியோர் மெ�னகுருவின் முக்கியத்துவம் நன்கு விளங்க எழுதியுள்ளார்கள். அதேபோல் இலங்கையின் கா. சிவத்தம்பி, சு. வித்தியானந்தன், எஸ். சண்முகதாசன், கைலாசபதி, அ. சண்முகதாஸ், பால சுகுமார், அருட்சகோதரி ஸ்ரனிஸ்லஸ் மேரி, ஏ. ரி. பொன்னுத்துரை ஆகியோர் மெ�னகுருவைப் பற்றி மட்டுமல்லாது அவரது நாடகங்கள் குறித்தும் ஆய்வு நோக்கோடு எழுதியுள்ளார்கள்.

நாற்பது ஆண்டுகளாகத் தீவிரமாகச் செயல்பட்டுவரும் ஓர் ஆளுமையைச் சிறந்த முறையில் கெ�ரவிக்கும் தொகுப்பு இது.

வெளியீடு: அனாமிகா, இல 48 பெய்லி முதலாம் குறுக்குத்தெரு, மட்டக்களப்பு, இலங்கை. பக். 96, விலை: குறிப்பிடவில்லை.

Tuesday, August 26, 2008

லயம் மண்ணின் தாளங்கள் 2005





கிழக்குப் பல்கலைக்கழகத்தில் 2005 நாடக விழாவின் போது லயம் மண்ணின் தாளங்கள் நிகழ்ச்சியை அறீமுகப்படுத்திய போது.

கண்ணகி குளிர்த்தி 1994


ரூபவாகினியில் கண்ணகி குளிர்த்தியை அறிமுகம் செய்யும் போது.

Sunday, August 3, 2008

பேராசிரியர் மெளனகுருவின் மட்டக்களப்பு மரபுவழி நாடகங்கள் நூல் பற்றி பேராசிரியர் கா.சிவத்தம்பி


This work byDr.S.Maunaguru on kuttu,the traditional tamil theatre of the batticaloa region of sri lanka(mattakkalappu in tamil) is a significant contribution to the theatre history of both sri lanka and tamil nadu(india) in that it describes and analyses for the first time the famous vadamodi,tenmodi and makiti forms,locating them firmly within the socio-cultural context of batticaloa and providing the performance detils from the make-up and the costumes to the manner and modes of enacting the roles.

This book is of immense value to students of indian and tamil theatre and of the social history of batticaloa.

பேராசிரியர் மெளனகுருவின் வெளிவந்த நூல்கள்


1.20ம் நூற்றாண்டு ஈழத்து தமிழ் இலக்கியம்

(இணை ஆசிரியர்)

2.சடங்கிலிருந்து நாடகம் வரை.

3.தப்பி வந்த தாடி ஆடு

(நாடகம்)

4.மெளனகுருவின் மூன்று நாடகங்கள்.

5.பழையதும் புதியதும்.

6.ச்வாமி விபுலானந்தர் காலமும் கருத்தும்.

7சங்காரம்-ஆற்றுகையும் தாக்கமும்.

8.ஈழத்துத் தமிழ் நாடக அரங்கு.

9.கால ஓட்டத்தினூடே ஒரு கவிஞன்.

நீலாவாணன்.

10.நடிப்பு முறமைகள் பற்றிய எண்ணக்கருக்கள்.

11.கலை இலக்கிய கட்டுரைகள்.

12.சக்தி பிறக்குது(நாடகம்).

13.பேராசிரியர் எதிரி வீர சரச்சந்திரவும்

ஈழத்து நாடக மரபும்.

14.இராவணேசன்(நாடகம்)